வடக்கில் 17 வீதமானவர்களுக்கு அடையாள அட்டைகள் இல்லை
வடக்கில் 17 வீதமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. தேர்தல்களை முன்னிட்டு பிரதேச மக்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்க பெபரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.
தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகிக்கும் விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்துடன் இணைந்து பெபரல் அமைப்பு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
எதிர்வரும் 1ம் திகதி முதல் நான்கு நாள் விசேட நடமாடும் சேவையொன்றின் தேசிய அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட உள்ளது.
அக்ஷய திருதியை யாழில் கோலாகலம்.
ஐஸ்வர்யம் தரும் அக்ஷய திருதியைத் திருநாளாகிய நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடைகளில் மக்கள் நகைகளைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சங்கநிதி, பதுமநிதி என்கிற ஐஸ்வர்ய நிதிக்கலசங்களைப் பெற்ற அக்ஷய திருதியை நன்நாளில் செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத்தரும் என்பதும் அள்ள அள்ளக்குறையாத இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் எப்போதும் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.
இதனாலேயே இந்நாளில் தங்கம் வாங்குவதற்கு பலரும் முண்டியடிப்பதுண்டு. இந்தியாவிலும், இலங்கையிலும் நேற்றைய தினம் தங்க விற்பனை அமோகமாக நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறைநாளாக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் எல்லா நகை வியாபாரநிலையங்களும் திறந்திருந்தன.
பெரும்பாலான நகை வியாபாரிகள் வாடிக்கையாளரைக் கவரும் வகையில் பல்வேறு பரிசுத்திட்டங்களையும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழில் பாடசாலை மாணவிகளை வைத்து விபச்சார நடவடிக்கை! (அதிர்ச்சி படங்கள்)
யாழில் பாடசாலை மாணவிகளை வைத்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய விடுதி இன்று யாழ்.பிரதேச செயலகத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இவ் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞன் யாழில் தங்கநகை வியாபாரத்தில் ஈடுபடுவபரின் மகன் எனவும் குறித்த மாணவி சுன்னாகத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
யாழ்.நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள போட் என்ற விடுதியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த இளைஞன் பாடசாலை மாணவியை காரில் அழைத்து வந்து விபச்சரத்தில் ஈடுபடுத்தியமை தெரியவந்துள்ளது.
கையும் களவுமாக பிடிபட்ட மாணவியையும் குறித்த இளைஞனையும் யாழ்.பிரதேச செயலக அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. Read the rest of this entry »


























